அறிக்கை
உயிரை பணயம் வைத்து செயல்படுகின்ற காவல்துறைக்கு கரும்புள்ளி குத்தினால் சமுதாய கேடாக முடியும்: முதல்வர் அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 நவம்பர் 2009, 05:42.19 AM GMT +05:30 ]
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த காவல்துறையை குற்றம் சாட்டி கரும்புள்ளி குத்துவது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவல்துறையை பொறுத்தவரை என் கருத்து எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஒரு விதமாகவும், ஆளுங்கட்சியில் இருக்கும்போது இன்னொரு விதமாகவும் இருந்ததில்லை. அரசியல்வாதிகள் சிலருக்கு போலீஸ் என்றால் காழ்ப்பு, வெறுப்பு. நான் எந்த நிலையிலும் காவல்துறை பற்றி ஒரே கருத்தை கொண்டிருப்பவன்.

எதிர்க்கட்சி துணைத்தலைவராக சட்டமன்றத்தில் 12-7-62 அன்று பேசும்போது, "மழையிலும் வெயிலிலும் நள்ளிரவிலும் கொலைகாரர்கள் கள்வர்கள் மத்தியிலும் தங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் கடமைக்காக போராடும் தியாக சீலர்களை திமுக பாராட்டுகிறது" என்று குறிப்பிட்டேன். ‘உதயசூரியன்’ நாடகத்திற்காக நான் இயற்றி தடை செய்யப்பட்டிருந்த ஒரு தாலாட்டு பாட்டை பேரவையில் பாடிக் காட்டினேன்.
இதன் தொடர்ச்சியாக 1969ல் நான் முதல்வரானதும் காவல்துறைக்கான தனிக்குழு (போலீஸ் கமிஷன்) ஏற்படுத்தி அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினேன். திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மேலும் இரண்டு முறை போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. அவற்றின் பரிந்துரைகளின்படி 1967ல் காவலர் அடிப்படை சம்பளம் ரூ.70 ஆகவும், பஞ்சப்படி ரூ.59 ஆகவும் இருந்தது. தற்போது அடிப்படை சம்பளம் ரூ.7,300, அகவிலைப்படி உட்பட மொத்தம் 10,300 என உயர்ந்துள்ளது.

காவல்துறை தமிழக சட்டம் ஒழுங்கை காத்திட இயன்ற அளவு பாடுபடுகிறது. கடந்த ஓராண்டில் திருவிழாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முக்கிய நபர் வருகைகள் அனைத்தும் அமைதியாகவே முடிந்துள்ளன.

சம்பவங்கள் ஏதுமின்றி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டதற்கும் காரணம் காவல்துறை. கொடைக்கானல் வனப்பகுதியில் பயிற்சி முகாம் அமைக்க முற்பட்ட தீவிரவாதிகளின் முயற்சிகளை முறியடித்தனர். 22 பேரை கைது செய்து, 12 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதன் மூலம் பிரிவினை சக்திகள் மேற் கொண்ட மத நல்லிணக்க தகர்ப்பு முயற்சிகளை தடுத்தனர்.

கடந்த 37 வருடமாக தலைமறைவாக இருந்த நக்சலைட் தமிழ்வாணன், 38 வருடமாக தலைமறைவாக இருந்த ஜோலார்பேட்டை நக்சலைட் சிவலிங்கம் (எ) சிவா, அவரது சகா சாமி (எ) சாமிநாதன், 22 வருடமாக தலைமறைவாக இருந்த நக்சலைட் என்.கே.கோபால் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு வெடிபொருள், மருந்துகள் கடத்த முயற்சித்தவர்கள் மற்றும் இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது 70 வழக்குகள் பதிவு செய்து 299 நபர்களை கைது செய்துள்ளனர்.

இதனால் 2006ல் 89 சதவீத குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, களவுபோன 34.8 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன. 2007ல் 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 48.7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன. 2008ல் 82 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 47.61 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன. இவ்வாண்டு செப்டம்பர் வரை 72 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 39.7 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

(இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க வழக்குகள் பற்றிய முழு விவரங்களை முதல்வர் விவரித்துள்ளார்).

ரயில்வே காவல்துறையினர் ராஞ்சியை சேர்ந்த ராஜன் ராம் மற்றும் அமர்நாத் ஜெய்ஸ் வால் ஆகியோரை கைது செய்து 34 ரயில் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகளை கைப்பற்றினர்.

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையினர் திண்டுக்கல் மருத்துவர் பாஸ்கரன் கொலை வழக்கிலும், எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கிலும் திறமையாக புலன் விசாரணை செய்து எதிரிகளை கைது செய்தனர்.

மேலும் நிஷீறீபீ னிuமீst மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ றிஸ்t. லிtபீ., சம்பந்தப்பட்ட தங்கக்காசு மோசடி வழக்கில் 25 எதிரிகளை கைது செய்து ரூ.192 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவினர் பட்டுக்கோட்டை ரமேஷ் மற்றும் வலங்கைமான் செந்தில் ஆகியோரை கைது செய்து திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் - பெரிய நாயகி கோயிலில் களவு போன தொன்மைவாய்ந்த மரகதலிங்கத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மூன்றாண்டு காலக்கட்டத்திலேயே தங்கள் உயிரை பணயம் வைத்து சமூக எதிரிகளோடும் கள்வர்களோடும் போராடி காவல்துறையினர் பெற்றிருக்கும் வெற்றிகளின் காரணமாக விளைந்துள்ள சாதனைகளை நாம் பாராட்டிட வேண்டும். மனித உயிர்களையும் உடமைகளையும் காப்பதற்காக காவல்துறையினர் எதிர்கொள் ளும் சவால்கள் எண்ணற்றவை; எண்ணிப் பார்த்திடவே இயலாதவை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு, காவல் துறையினரை குற்றம் சொல்லி குறை காண்பதும், அவர்களின் நீண்ட தொண்டற வாழ்க்கையில் திடீரென்று கரும்புள்ளி குத்தி அவர்கள் தொடர்ந்து சீரிய பணியாற்றுவதற்கு தயக்கம் ஏற்படுத்த முயல்வதும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல; அது சமுதாய கேடாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டுவது எனது கடமை.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்