இந்தியச் செய்தி
மோசடி வழக்கில் நித்தியானந்தாவிற்கு கடுமையான தண்டனை உண்டு: கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு
[ சனிக்கிழமை, 07 யூலை 2012, 08:42.29 AM GMT +05:30 ]
வேத பல்கலைக்கழகம் தொடங்க பக்தர் கொடுத்த ரூ 10 கோடி நன்கொடையை மோசடியாக பயன்படுத்திய வழக்கில், நித்யானந்தா குற்றவாளி என்றும் அவர் மீதான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆசிரமகிளைகள் அமைத்து வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் நடத்திய அந்தரங்க சேட்டைகளால் உலகமே ஏளனமாய் சிரிக்கிறது. காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்துள்ளார்.

தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன், நித்யானந்தா இன்வெஸ்ட் மென்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல்யூஷன் போன்ற பல நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழில் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். அமெரிக்காவில் இருந்தாலும், தாய் நாட்டு கலாச்சாரத்தில் இவர்களுக்கு அபார பற்று.

கடந்த 2005-ல் அமெரிக்காவில் நித்யானந்தா சுற்றுப்பயணம் செய்த போது அவரது ஆன்மீக உரையையும், வேத பாராயண திறமையையும் பார்த்து பாபட்லால் தம்பதியினர், நித்யானந்தாவை ஆன்மீக குருவாக ஏற்றனர்.

பாபட்லாலின் வசதி வாய்ப்புகளை புரிந்து கொண்ட நித்யானந்தா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதா பல்கலைகழகம் நிறுவ ஆசைப்படுவதாக கூறினார். அதை வரவேற்ற பாபட்லால் 1.7 மில்லியன் டாலர் அதாவது ரூ.9.35 கோடி பணம் நன்கொடையாக வழங்கினார். அந்த பணத்தை வைத்து நித்யானந்தா வேத பல்கலைக்கழகம் தொடங்கவில்லை. மாறாக தனது நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டார்.

இதற்கிடையில் நித்யானந்தா- ரஞ்சிதா சல்லாப சி.டி. வெளியானதை பார்த்ததும் பாபட்லால் அதிர்ந்து போனார். நித்யானந்தாவின் இன்னொரு முகத்தை பார்த்த பாபட்லால் கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் நித்யானந்தா திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த பாபட்லால் கலி போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் வில்சன் தனது அதிரடித் தீர்ப்பில், "நித்யானந்தா பவுண்டேஷன் அமெரிக்க நிதிச்சட்டப்படி செயல்படவில்லை. அதனால் இது ஒரு மோசடி நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரை திருப்பி தர வேண்டும். இந்த வழக்கின் தண்டனை விபரம் 19-ந் திகதி அறிவிக்கப்படும்", என்றார்.

19-ந் திகதி நித்யானந்தாவுக்கு என்ன தண்டனை என்பது தெரிய வரும். அமெரிக்க சட்டங்கள் மோசடியை தீவிரமாக தண்டிக்கக் கூடிய வகையில் உள்ளன. கடுமையான தண்டனைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை அளிப்பது உறுதி என்பது தெரிந்ததும், மதுரை ஆதீன மட விவகாரமும் பரபரப்பாகியுள்ளது. மதுரை ஆதீன மீட்பு குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இது பற்றி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை கண்ணன் கூறும் போது, இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்து கொண்டு இளைய ஆதீனம் பட்டத்தை திரும்ப பெற வேண்டும். அப்போது தான் மதுரை ஆதீனத்தின் கவுரவம் காப்பாற்றப்படும் என்றார்.  இந்த சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி என்று தனது வக்கீல்கள், சிஷ்ய கோடிகளுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளாராம் நித்தியானந்தா.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்

மத்திய அமைச்சரவையில் எட்டு புதிய அமைச்சர்கள் நியமனம்

8-பேரின் உயிரை காவு வாங்கிய கள்ளச் சாராயம்

டெல்லியை அச்சுறுத்தும் இயற்கையின் சீற்றம்: இதுவரை 60 பலி

மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்

பாஜவிலிருந்து முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி விலகல்: புதிய ஆட்சி அமைய வாய்ப்பு

அரசு ரத்த வங்கியின் கவனயீனத்தால் 4 பேருக்கு எய்ட்ஸ் நோய்

மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அதிருப்தி

சொத்துக்காக பெற்ற தாயை கொலை செய்த மகள்

மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் சுட்டுக் கொலை

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
5 வயது சிறுமி கற்பழிப்பு: மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:36.45 AM ]
இந்தியாவில் குர்காவ்னில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்ட5 வயது சிறுமி, தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். [மேலும்]
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் வம்சாவளியினர் குஜராத்தில் வசிக்கின்றனரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:30.54 AM ]
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணுக்கள் இருப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தந்தை திட்டியதால் 14 வருடங்கள் தந்தையை பிரிந்த மகன்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 04:10.57 AM ]
தந்தை திட்டியதன் காரணமாக 14 வருடங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருந்த மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
காங்கிரஸ்-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி குறித்து தலைவர்கள் தீர்மானிப்பார்கள்: ராகுல் காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:51.06 AM ]
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா கட்சி இறங்கியுள்ளது. [மேலும்]
புதைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளில் கண்டுபிடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:37.14 AM ]
1,200 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமையுடன் திகழ்ந்த நகரம் ஒன்று, அடர்ந்த கம்போடியக் காடுகளிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]