தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சிகளான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
சேலம் இடைப்பாடியில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் குஷ்பு, தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
போராட்டம் நடைபெறும் ஒவ்வொரு இடமும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றன.
இரண்டாம் இணைப்பு: போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 2500 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், நடிகை குஷ்பு என முக்கியஸ்கர்கள் கைதாகியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சிறைகள் தவிர வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளிலும் கைதானவர்கள் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு: சிறை நிரப்பும் போராட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி பேட்டியளித்துள்ளார். தொண்டர்களை ஆந்திராவில் அடைப்போம் என்றெல்லாம் அரசு மிரட்டல் விடுத்துள்ளது.
நாங்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டாலும் அஞ்சமாட்டோம். பொலிஸாரின் அச்சுறுத்தலையும் மீறி இன்று நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என கருணாநிதி கூறியுள்ளார்.


|