இவர் தனது மருத்துவமனையில் இதுபோன்ற பல சில்மிஷங்களை நடத்தியுள்ள விடயம் தற்போது பொலிஸ் விசாரணையின் போது அம்பலமாகியுள்ளது.
மதுரையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வரும் இவர், 1986ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு முடித்த பின் சொந்தமாக மருத்துவமனை ஒன்று தொடங்கி நடத்தி வந்தார்.
தனது மருத்துவமனையின் முன்பகுதியில் அறை ஒன்றை அமைத்துள்ள இவர், அங்குதான் இவ்விதமான சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார்.
மருத்துவமனைக்கு நோயாளிகளாக வரும் இளம் பெண்களுக்கு இந்த அறையில் வைத்து குளுக்கோஸ் ஏற்றுவார். அவர்கள் சிறிது மயக்கமான நிலையில் சில்மிஷத்தில் ஈடுபடுவார். இதே போல தன்னிடம் பணியாற்றும் மருத்துவ தாதிகளையும் இந்த டொக்டர் விட்டு வைக்கவில்லை.
ஒத்துழைக்காத மருத்துவ தாதிகள், இளம் பெண்களாக இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு தப்பித்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தான், பள்ளிக்கூட மாணவியொருவர் இவர் வலையில் சிக்க, அவர் இந்த விடயத்தை காவல் துறையினரிடம் தெரிவித்தார். பின்னர் கைது செய்யப்பட்ட சங்கர நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் நடத்தி வந்த மருத்துவமனையை அரசு தற்போது இழுத்து மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. |