உத்தரகண்ட் மாநிலம் ஹனூலில் இருந்து விகாஸ்நகருக்கு 52 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து நேற்று புறப்பட்டது.
சக்ரதா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையோரம் இருந்த 200 மீற்றர் ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது.
பேருந்து விபத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின் நடந்த மீட்புப்பணியில் 27 பேர் இறந்ததாக தெரியவந்தது.
படுகாயமடைந்த 25 பேர் சக்ரதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோசமான சாலையும் அதிவேகத்தில் பேருந்து வந்ததுமே இவ்விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்க உத்தரவிட்டார். |