தமிழ்நாட்டுச் செய்தி
கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது
[ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 11:07.44 AM GMT +05:30 ]
வேலூரில் கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட கட்டையாக கிடந்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பாக்கம் பொலிசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது குறித்த பெண் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி கலா(வயது 37) என்பது தெரியவந்தது.

கட்டிடத் தொழிலாளியான கலாவுக்கு சக தொழிலாளியான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(வயது 42) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் காவேரிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது கலாவின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால், சந்தேகம் அடைந்த ராஜா கண்டித்துள்ளார். இருப்பினும் கலாவின் போக்கு மாறவில்லை.

இதற்கிடையே 18-5-2008 அன்று ராஜாவும், கலாவும் காவேரிப்பாக்கத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா கலாவை அடித்து காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கோபால் என்பவரின் நிலத்தில் அவரை எரித்துக் கொன்றார்.

கொலை நடந்து 5 ஆண்டுகள் கழித்து ராஜா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொண்டபுரம் கிராம நிர்வாக அதிகாரி வேணுகோபாலிடம் சரண் அடைந்தார்.

அவர் இது குறித்து காவேரிப்பாக்கம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]