இந்தியச் செய்தி
கருவில் இருக்கும் போது பெண் சிசுவை கலைத்தால் மரண தண்டனை: அமலுக்கு வரும் அதிரடி சட்டம்
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 04:59.39 AM GMT +05:30 ]
கருவில் இருக்கும் பெண் சிசுவை சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யும் டொக்டர்களுக்கும் இதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிரடி சட்டத்தை மகாராஷ்டிரா அரசு அமலுக்கு கொண்டு வர உள்ளது.

இந்தியாவில் தாயின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிய தடை உள்ளது. இருப்பினும் பல தனியார் வைத்தியசாலைகளில் சட்ட விரோதமாக கண்டறியப்பட்டு, கரு கலைக்கப்படுகிறது.

தற்போதுள்ள சட்டத்தின்படி, பாலினத்தை கண்டறியும் டொக்டர்கள், ரேடியோலாஜிஸ்ட் மற்றும் சம்பந்தப்பட்ட கணவன், உறவினர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால், இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

சட்டவிரோத கரு கலைப்பால் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கணிசமாக குறைந்ததால் உஷாரான மகாராஷ்டிர அரசு, பாலினத்தை கண்டறியும் சோனோகிராபி மையங்கள், கரு கலைப்பு மையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.

அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அதிரடியான புதிய சட்டம் இயற்ற தீர்மானித்துள்ளது.

சட்ட விரோதமாக கரு கலைப்பு செய்யும் டொக்டர்கள், கருவை கலைக்க பெண்ணை நிர்ப்பந்தப்படுத்தும் கணவன் அல்லது உறவினர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை அரசு தயாரித்துள்ளது.

கரு கலைப்பை கொலை குற்றமாக மாற்றினால்தான் இது சாத்தியம். எனவே, மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு.

கரு கலைப்பு தொடர்பாக சட்ட பேரவையில் எதிர்க்கட்சிகள் நேற்று கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது நல்வாழ்வு துறை அமைச்சர் சுரேஷ் ஷெட்டி இந்த தகவலை தெரிவித்தார்.

இதன்படி, இ.பி.கோ 302வது பிரிவின் கீழ் (கொலை குற்றம்) வழக்கு பதிவு செய்வது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்.

மகாராஷ்டிராவில் உள்ள 8,331 சோனோகிராபி மையங்களில் 291 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களை அடிக்கடி சோதனை செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பொலிஸ், நல்வாழ்வு, வருவாய் துறைகளின் அதிகாரிகள் அடங்கிய 584 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 4,117 கரு கலைப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் சட்ட விரோதமாக செயற்பட்ட 341 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பீட் மாவட்டத்தில், ‘முண்டே ஹாஸ்பிடல்‘ என்ற பெயரில் வைத்தியசாலை நடத்தி வந்த டொக்டர் சுதாம் முண்டே, அவருடைய மனைவி டொக்டர் சரஸ்வதி ஆகியோர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 20 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான கரு கலைப்பை செய்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்களும் இவர்களை தேடிவந்து கருவை கலைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]