இந்த அக்னி ஏவுகணை தரையிலிருந்து சென்று தரையிலிருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
ஒடிசாவின் பாலாச்சூர் ஏவுகணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை இன்று காலை 10.10 மணியளவில், வெற்றிகரமாக ஏவப்பட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
12 தொன் எடையும், 15 மீற்றர் நீளமும் கொண்ட இந்த அக்னி, 1 ஏவுகணை, 1000 கிலோ வரையிலான எடையை தாங்க வல்லதாகும்.
இன்றைய சோதனை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து இந்த ஏவுகணை இந்திய இராணுவத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |