மதுரை மாவட்ட சுற்று வட்டாரங்களில் சட்டவிரோதமாக கிரானைட் பாறைகளை வெட்டி எடுத்து வியாபாரம் செய்த குற்றத்திற்காக பி.ஆர்.பி பழனிச்சாமியை பொலிஸார் தேடி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக கிரானைட் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பி.ஆர்.பி நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக தலைமறைவாகியிருந்த பி.ஆர்.பி பழனிச்சாமி மதுரை காவல் நிலையத்தில் தனது சட்டத்தரனிகளுடன் இன்று சரணடைந்தார்.
அவரை கைது செய்து இன்று பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றார்கள்.
இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 18 பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். |