தமிழ்நாட்டுச் செய்தி
எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 04:53.58 AM GMT +05:30 ]
எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் 85, சென்னையில் நேற்று காலமானார்.

கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

அவரது உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை, வரலாறு: 1927ம் ஆண்டு கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார்.

சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என தமிழக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இவருடைய “நான் கிருஷ்ண தேவராயன்” என்ற வரலாற்றுப் புதினம் புகழ் பெற்ற ஒன்று. கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திற்கு ரா.கி.ரங்கராஜன் வசனமும் எழுதியுள்ளார்.

சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர்.

வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன்.

1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு- என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன்.

மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் ஆவர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]