இந்தியச் செய்தி
வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேறிய விவகாரம்: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 04:17.21 AM GMT +05:30 ]
கர்நாடக மாநிலம் பெங்களூரை விட்டு வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறிய விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெங்களூரில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியானதையடுத்து அம்மாநகரத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இதையடுத்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற ஊடகங்களின் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

அசாம் கலவரத்தின் எதிரொலியாகவே வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகவும் இதன் காரணமாக பெங்களூரை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கணவனுடன் வெப்-கேமராவில் சண்டையிட்ட மனைவி தற்கொலை..!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

செம்மொழி அந்தஸ்து பெற்றது மலையாள மொழி : மத்திய அமைச்சரவை தீர்மானம்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 9 தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]