இந்தியச் செய்தி
டுவிட்டர் இணையதளம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அரசு
[ செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012, 01:23.54 PM GMT +05:30 ]
வடகிழக்கு மாநிலத்தவருக்கு இணையதளம் மற்றும் செல்போன் வாயிலாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேஸ்புக், யூ டியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணைக்கு ஒத்துழைக்காத டுவிட்டர் இணையதளம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அசாமில் போடோ இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. இது பெரும் கலவரமாக மாறியது.

ஒரு வாரம் நீடித்த இந்த கலவரத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூர், புனே, ஐதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற தொடங்கினர்.

இமெயில் மற்றும் செல்போனில் அவர்களுக்கு மிரட்டல் செய்தி வந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்திகள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.

பேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக வலை தளங்கள் இதனை உறுதி செய்துள்ளன. ஆதாரங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியதை தொடர்ந்து ஆதாரங்கள் திரட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. யூ டியூப் மற்றும் பேஸ் புக் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தொலை தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது வரை 250க்கும் அதிகமான வலை தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

டுவிட்டர் வலை தளம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. டுவிட்டர் உள்பட விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அனைத்து வலை தளங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். முதல் கட்ட விசாரணை அறிக்கை பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பஸ்சில் வைத்து பழங்குடியின பெண் கற்பழிப்பு: கண்டக்டர் கைது

சிதம்பரம் வீட்டினை முற்றுகையிட்ட 57 பேர் கைது

வட இந்தியாவில் கனமழைக்கு இதுவரை 131 பேர் பலி

முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு பாக் அனுமதி

சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார்

கணவரை மிரட்டுவதற்காக தீக்குளித்த இளம் பெண் உயிரிழந்த பரிதாபம்

இறந்து போனவர் உயிர் பிழைத்த அதிசயம்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?

வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
யமுனை ஆற்றில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 10:18.23 AM ] []
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 04:52.57 AM ] []
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளளதனால் கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. [மேலும்]
சவுதி விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:35.47 AM ]
மும்பையில் இருந்து 321 பயணிகளுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சவுதிக்கு புறப்பட்டு சென்றது. [மேலும்]
மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கல் தடுக்கி விழுந்து பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:08.29 PM ]
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான  சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார். [மேலும்]
குவைத்தில் மகனுக்கு நிறைவேற்றப்படவுள்ள தூக்கு தண்டனையை நிறுத்த கோரிய தாய்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 12:25.11 PM ]
குவைத்தில் நாளை தூக்கு தண்டனை விதிக்கப்பட தனது மகனை காப்பாற்ற வேண்டும் என அவரது தாயார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]