மும்பையில் (2008) நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு அநியாயமாக பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு சென்ற வருடம் ஒக்ரோபர் மாதம் மும்பை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அஜ்மல் மேல் முறையீடு செய்தான்.
சமீப தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம் கசாப்பிற்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தளர்த்தக் கோரி கசாப் சார்பில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


|