வீதிகளின் நடுவில் சிலைகளை வைக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனுமதி அளிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு தலைவரின் சிலையை வைக்க மாநில அரசு அனுமதி அளித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கூறி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,
‘‘தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க கேரள அரசு வழங்கிய அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதிக்கிறது. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இப்போதுள்ள நிலையே ந¦டிக்க வேண்டும். இனி, போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்கள், சாலைகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலை வைக்கவோ, கட்டிடங்கள் கட்டுவதற்கோ கேரள அரசு அனுமதி அளிக்க கூடாது.
எனினும், போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தும் தெரு விளக்குகள் போன்றவற்றை அமைக்க அனுமதி அளிக்கலாம். இந்த உத்தரவு கேரளாவுக்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்’’ என கூறியுள்ளனர். |