கடந்த 2008, நவம்பர் 26ம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உட்பட சில முக்கிய இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் அதாவது, தாஜ் ஹோட்டல் எங்கிருக்கிறது, சிவாஜி ரயில் நிலையம் எங்கிருக்கிறது என தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அபு ஹம்சாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவன் என்றும் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடம் பயிற்சி பெற்றவன் என்பதும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி பொலிஸிடம் இருக்கும் அபுவிடம் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

|