டெல்லியில் ஜெட்பூர் என்னுமிடத்தில் தீபக், அவரது மனைவி கவிதா(வயது 32) மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
கவிதா கடந்த மூன்று மாதங்களாக பெற்றோருடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தார். பலமுறை முயற்சித்தும் எவ்வித பலனுமில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் தங்களது மகள் வீட்டின் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து தனது மகளை பார்த்து வரச் சொல்லியிருக்கின்றனர்.
அப்போது அவர்கள் நாங்களும் கவிதாவை பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆகிவிட்டதாக என்று கூறியுள்ளனர்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த கவிதாவின் பெற்றோர்கள் பொலிசார் துணையுடன் வீட்டிற்கு வந்து கவிதாவை தேடினர்.
அப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த கவிதாவை பொலிசார் மீட்டுள்ளனர். மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்ட கவிதா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து டெல்லி காவல் துறையினர் அவரது கணவர் தீபக்கிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. |