கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் ஏராளமானோர் ஜெல்பைகூரி எக்ஸ்பிரஸ் சிறப்பு இரயில் வாயிலாக அசாம் புறப்பட்டு சென்றனர்.
இவர்கள் சென்ற இரயில், மேற்குவங்க மாநிலம் சிலிகூரி வந்த போது கூட்ட நெரிசல் காரணமாக இரயிலில் இருந்து இருவர் தவறி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இவர்கள் சம்பவ இடத்திலே பலியாயினர்.
இவர்கள் இரயில் பெட்டியின் நுழைவு வாயிலில் நின்று பயணம் செய்ததாலும், பெட்டியில் உள்ளே கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்ததால் தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது.
இது தவிர மேலும் 8 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிலிகூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். |