இந்தியச் செய்தி
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் களமிறங்கும் ஏர் இந்தியா விமானிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2012, 03:44.50 AM GMT +05:30 ]
ஏர் இந்தியா விமானிகளின் வேலைநிறுத்தம் நேற்றுடன் 47வது நாளை எட்டியிருக்கும் நிலையில், இன்று முதல் புதுடெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதென இந்திய விமானிகள் சங்கம் (இந்தியன் பைலட்ஸ் கில்டு) முடிவு செய்துள்ளது.

ஊதிய உயர்வு, போயிங் விமான சிறப்பு பயிற்சி, இதர சலுகைகள் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏர் இந்திய விமானிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு மத்திய அரசு, டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய விமான அமைச்சர் அஜித் சிங் 100 க்கும் அதிகமான விமானிகளை பணிநீக்கம் செய்தார். இருப்பினும் இதர விமானிகள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிய வில்லை.

இந்நிலையில் தங்களது போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக ஏர் இந்தியா விமானிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விமானிகள் சங்க உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகி ஒருவர் கூறியது: ஏர் இந்தியா நிர்வாகத்தின் பாரபட்சத்தையும் சுரண்டலையும் கண்டித்து விமானிகள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவர்.

விரைவிலேயே வேலைநிறுத்தம் முடிய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 101 விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்தும்வரை நாங்கள் வேலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை.

எங்களுக்கு மிக அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற பொய் பரப்பப்பட்டு வருகிறது. எங்கள் சம்பள ரசீதை பொது மக்களிடம் காட்டத் தயாராக இருக்கிறோம். நாங்கள் எவ்வளவு வாங்குகிறோம் என்று அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று அந்த நிர்வாகி கூறினார்.

விமானிகள் நடத்திவரும் வேலைநிறுத்தத்தை சட்டத்துக்கு எதிரானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

வேலைநிறுத்தத்தை நடத்திவரும் இந்திய விமானிகள் சங்கத்தின் அங்கீகாரத்தை ஏர் இந்தியா நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு

“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்

தண்ணீர் குடிக்க வந்த யானை பரிதாபமாக இறந்தது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

திடீரென போராட்டம் வாபஸ்: இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்குகிறது

ஒரு இந்தியன் கூட பசியோடு இருக்க கூடாது: ராகுல் காந்தி ஆவேசம்

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

வெறும் 457 கிராம் எடையில் பிறந்த குழந்தை: லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்தது

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]