அவருக்கு பதிலாக வருவாய்த்துறை அமைச்சராக பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.டி., வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பதவியேற்பு விழா நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
செங்கோட்டையன் எதன் காரணமாக நீக்கப்பட்டார் என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. |