இந்தியச் செய்தி
தீவிரவாதிகள் ஊடுறுவும் பொருட்டு இந்திய எல்லையில் மர்ம குகை (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 05:53.35 AM GMT +05:30 ]
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் எளிதாக ஊடுறுவும் வசதியில் மர்ம குகையொன்றை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சில்லாயாரி பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கான முகாம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.

இங்கு எல்லைப் பாதுகாப்புப்படையினர் ரோந்து சென்ற போது குகையொன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இக்குகை பாகிஸ்தான் எல்லையில் தொடங்கி இந்தியா வரை பரவிக்கிடக்கிறது. 3 அடி நீளமும், 3 அடி விட்டமும் உள்ள இக்குகை, 25 அடி ஆழத்திலும், 400 மீ நீளம் கொண்டது.

உடனடியாக எல்லைப்பாதுகாப்புப்படையினர் இக்குகை வழியாக சென்று ஆய்வு நடத்தினர். இது பாகிஸ்தானை எல்லை வரை சென்றதால் தீவிரவாதிகள் ஊடுருவ தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு, அப்பகுதியில் மழை ‌பெய்திருந்ததால், குகைக்குள் செல்ல முடியவில்லை. தண்ணீர் வெளியேற்றப்பட்டதும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் குகைக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.

இது குறித்து எல்லைப்பாதுகாப்புப்ப‌டை டி.ஐ.ஜி. என்.எஸ். ஜம்வால் கூறுகையில், உள்ளூர் விவசாயிகள் இக்குகை பற்றி விவரங்களை தெரிவித்துள்ளனர். தற்போது சோதனை நடந்துவருகிறது.

இந்தியாவிற்குள் ஊடுருவும் பொருட்டு இக்குகை கட்டப்பட்டதாகவும் அதுவும் மிக சமீபமாகவே கட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]