நேர்காணல்
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும்; கருணாநிதி பேட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 07:44.47 AM GMT +05:30 ]
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி கிடைத்துள்ளது. மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். தொலைக்காட்சிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்:- நிலத்திற்கு எரு போட்டு விட்டு, தண்ணீர் பாய்ச்சி, விதை நட்ட விவசாயிக்கு இந்த நெல்லுதான் வளரும் என்று தெரியும். அதே நிலையில் நானும் இந்த நாட்டு மக்களுக்கு, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தேவையான தீர்வுகளை கூறி இன்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து தான் இருந்தேன்.

கே:- நீங்கள் டெல்லியில் காங்கிரசுடன் ஆட்சி அமைக்கப்போகிறீர்கள், முன்பு அமைச்சரவையில் இருந்த துறைகளே மீண்டும் கிடைக்குமா? அதற்கு மேலும் முக்கியமான துறைகள் கிடைக்குமா?

ப:- நான் இன்னும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. நாளை மறுநாள் தி.மு.க.வின் செயற்குழுக்கூட்டம் நடை பெறுகிறது. வெற்றி பெற்ற எம்.பி.க்களும், போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் சேர்ந்து கூடுகின்ற கூட்டம். அந்தக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசுவோம். இதற்கிடையிலே டெல்லியிலே என்னென்ன நிலைமைகள் நடைபெறுகின்றன என்பதையும் கவனிப்போம்.

கே:- உங்களுடைய மகன் மு.க. அழகிரி வெற்றி பெற்றிருக்கிறார். தயாநிதிமாறன் வெற்றி பெற்றிருக்கிறார். ஏற்கனவே கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவர்கள் மூவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

ப:- பொறுத்திருந்து பாருங்கள்.

கே:- அவர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

ப:- முதலில் அவர்கள் நினைக்கிறார்களா என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கே:- இந்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நீங்கள் இது வரை செய்து வந்த தொண்டை இந்த முறை அவர் செய்திருக்கிறார். இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு மு.க. ஸ்டாலினுக்கு கட்சியிலும், அரசாங்கத்திலும் இதைவிட அதிகமான இடத்தை கொடுக்க முடியுமா? கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா?

ப:- குறிப்பாக ஒரு இடத்தை கொடுப்பது என்பது முக்கியமல்ல. அவருக்கு உரிய இடம் இப்பொழுதே திராவிட முன்னேற்றக்கழக தோழர்களுடைய செயல்வீரர்களுடைய உள்ளத்திலே கிடைத்திருக்கிறது. தமிழ் நாட்டு மக்களுடைய உள்ளத்திலும் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து வருகிற இடங்களில் அவருக்கு நிச்சயமாக செல்வாக்கான இடம்-உரிய இடம் கிடைக்கும்.

கே:- அவருக்கு முதல்-அமைச்சர் பதவி கொடுக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறதா?

ப:- நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேனே. அதை எடுத்து நான் எப்படி கொடுக்க முடியும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்