| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| நளினி விடுதலை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:02.59 AM GMT +05:30 ] |
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவர் மனு செய்தார். அவரது மனுவை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், சட்டப்படி ஆலோசனைக் குழுவை மீண்டும் கூட்டி நளினி விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், நளினி விடுதலை குறித்து பரிசீலிக்க நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
சிறை ஆலோசனைக் குழு அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு முன்பு, மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சுவாமி கோரினார். நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் தேசிங்கு, ""சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை தமிழக அரசுக்கு இப்போதுதான் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆராய வேண்டியுள்ளதால் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்'' என்று கோரினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறை ஆலோசனைக் குழு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
சிறை ஆலோசனைக் குழு அறிக்கையின் மீதான மேல்நடவடிக்கைக்கு சுவாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் தடை கோரினார். இந்தக் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.
சற்று நேரம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ""தமிழக அரசின் பரிசீலனையில் உள்ள சிறை ஆலோசனைக் குழு அறிக்கையை, நீதிபதிகள் மட்டும் பார்வையிடும் வகையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று கோரினார்.
அந்தக் கோரிக்கையை ஏற்று சீலிட்ட கவரில் சிறை ஆலோசனைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|