இந்தியச் செய்தி
வாக்கெடுப்பு பற்றி முன்கூட்டியே தகவல் தராததால் புறக்கணிப்பு: மம்தா பானர்ஜி
[ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:28.38 AM GMT +05:30 ]
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்துவது பற்றி முன்கூட்டியே தகவல் தராததால் புறக்கணித்தோம் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பை ஆளும் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

இது குறித்து அந்த கட்சியின் தலைவர் மம்தா நிருபர்களிடம் கூறியதாவது:

மகளிர் இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். அனைத்துக் கட்சி கூட்டத்தில், சிறுபான்மையின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மகளிர் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால், அனைத்து கட்சி கூட்டத்தையே அரசு கூட்டவில்லை. உடனடியாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தி மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டது.

இது பற்றி கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே தகவல் தரவில்லை. இதனால்தான் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். மக்களவையில் மகளிர் மசோதாவை ஆதரிப்பதா என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தங்கள் சாதனையாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுவது உண்மை இல்லை. இவ்வாறு மம்தா கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்