| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| ராஜஸ்தானில் நாட்டாமையாக எம்பிஏ படித்த பெண் |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:32.42 AM GMT +05:30 ] |
முதுநிலை மேலாண்மை படிப்பை முடித்த 30 வயது பெண், பெரிய நிறுவனத்தில் அதிகார பதவியை தூக்கி எறிந்து கிராமத்தின் நாட்டாமையாக மாறியுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. |
இந்த ருசிகர சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது சோடா கிராமம். அதைச் சேர்ந்த பெண் சவி ரஜாவத். வயது 30. படிப்பறிவு குறைந்த கிராமத்தில் இருந்து நன்றாக படித்து வளர்ந்தார் சவி.
மேல் நிலைக் கல்வி முடித்து, பெங்களூரில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் வர்த்தக மேலாண்மை பட்டம் பெற்றார். பிறகு, 5 பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார். அனுபவம் பெற்ற பிறகு, தன்னை வளர்த்து ஆளாக்கிய கிராமத்துக்கு நன்மை செய்ய விரும்பினார்.
சவியின் தாத்தா ரகுவீர் சிங், அந்த கிராம நாட்டாமையாக இருந்தவர். சவியின் அம்மாவை கிராமம் முழுவதும் அவர் உடன் அழைத்துச் சென்று பழக்கினார். அவர் மூலம் சவியும் கிராமத்தின் பிரச்னைகளை நன்கு அறிந்திருந்தார்.
படித்து முடித்து 5வது நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கிராமத்தின் நாட்டாமையின் செயல்பாடுகளில் மக்கள் அதிருப்தியில் இருந்ததை சவி அறிந்தார். வேலையை உதறி விட்டு கிராமத்தைக் காப்பாற்ற புறப்பட்டார்.
கிராமத்தினரின் ஆதரவுடன் நாட்டாமை தேர்தலில் இரண்டு பேரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது ஜீன்ஸ், டீசர்ட் சகிதம் தீர்ப்பு கூறிக் கொண்டிருக்கிறார். இதுபற்றி சவி கூறுகையில், ‘’கிராமத்தை நன்கு கவனித்துக் கொள்வதற்கு எனது மேலாண்மை படிப்பு உதவுகிறது. தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பலர் வேலை செய்யாமல் கூலி வாங்குவதைக் கண்டேன். அவர்களை வேலை செய்ய வைப்பதே எனது அடுத்த வேலை” என்றார்.
சோடா கிராமத்தின் முதல் பெண் நாட்டாமை மட்டுமின்றி, மிக இளவயது நாட்டாமையும் சவிதான். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|