| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| காவல் நிலையங்களில் திருமணம் செய்ய தடை |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:09.22 AM GMT +05:30 ] |
காவல் நிலையங்களில் திருமணம் செய்வதை ஊக்குவிக்கக் கூடாது என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்த வேண்டுமென டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
மதுரை விரகனூரை சேர்ந்த செல்வி(35) என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:
திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கடந்த பிப்ரவரி 25ம் தேதி என் வீட்டுக்கு வந்தனர். என் மகன் சின்னராஜ்(18) மீது பெருங்குடியை சேர்ந்த மலையாயி(23) என்ற பெண் புகார் கொடுத்துள்ளதாகவும், அது பற்றி சின்னராஜிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர். அடுத்தநாள், நானும், கணவர் கருப்பசாமியும், மகனை அழைத்து கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றோம்.
அங்கு மலையாயியும், அவரது தந்தை கருப்பணனும் இருந்தனர். என் மகனும், மலையாயியும் காதலித்துள்ளனர்.
மலையாயிக்கு சின்னராஜை திருமணம் செய்து வைக்க வேண்டும் என போலீசார் எங்களை வற்புறுத்தினர்.
பின்னர், என்னையும், கணவரையும் வெளியே அனுப்பிவிட்டு சின்னராஜை காவல் நிலையத்திலேயே வைத்துக்கொண்டனர். தற்போது மலையாயி, கருப்பணன் கட்டுப்பாட்டில் சின்னராஜ் உள்ளான். அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் பி.முருகேசன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். சின்னராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, சின்னராஜ், ‘என்னை போலீசார் கட்டாயப்படுத்தி மலையாயியை திருமணம் செய்து வைத்தனர். பிறகு, என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினர்’ என்றார். இதையடுத்து, சின்னராஜை, தாயுடன் செல்ல நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
பின்னர், ‘காவல் நிலையங்களில் திருமணம் செய்து வைப்பதை ஊக்குவிக்க கூடாது. இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தமிழக டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|