| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| மின் வாரிய அதிகாரியை எரித்துக்கொன்ற வழக்கில் பெண்போலீஸிடன் கள்ளக்காதலன் கைது |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 07:20.33 AM GMT +05:30 ] |
கள்ளக்காதல் தகராறில் மின் வாரிய அதிகாரியை எரித்துக்கொன்ற பெண்போலீஸின் கள்ளக்காதலன் கூட்டாளிகளிடன் கைது செய்யப்பட்டுள்ளார். |
சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). இவர் பெருங்குடி மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் இவரை திடீர் என்று காணவில்லை. இது குறித்து அவரது தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி இதுபற்றி விசாரணை நடத்தினார்.
ராஜேந்திரனுக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவி இருக்கிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். ராஜேந்திரன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும், வடபழனியைச் சேர்ந்த பெண் போலீஸ் சாஸ்திரகனிக்கும் தொடர்பு ஏற்பட்டது. சாஸ்திரக்கனியும் திருமணமாகி கணவரை பிரிந்து விட்டார்.
இதையடுத்து பெண் போலீஸ் சாஸ்திரக்கனியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது மின் வாரிய அதிகாரி ராஜேந்திரன் எரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசாரிடம் சாஸ்திரக்கனி கூறியதாவது:-
எனக்கும் ராஜேந்திரனுக்கும் பள்ளிப்பருவத்தில் இருந்தே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். ராஜேந்திரனை திருமணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் அவர் வீட்டில் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.
இதனால் அவருக்கு வேறு இடத்திலும், எனக்கு வேறு இடத்திலும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில் அவரும் மனைவியை பிரிந்து விட்டார். நானும், கணவரை பிரிந்து விட்டேன்.
எனக்கும், ராஜேந்திரனுக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் வீரராஜனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜேந்திரன் வந்து தகராறு செய்தார்.
உன்னால் நான் குடும்பத்தையே பிரிந்து வந்து இருக்கிறேன். நீ எப்படி வீர ராஜனுடன் பழகலாம் என்று கண்டித்தார். இதை நான் வீரராஜனிடம் கூறினேன்.
இதற்கிடையே ராஜேந்திரனுக்கு அவரது மனைவியும், மாமியார் பாக்கியமும் போலீசில் வரதட்சணை வழக்கு போட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாக்கியத்தை தீர்த்து கட்டச் சொல்லி வீரராஜனிடம், ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் கொடுத்து வைத்திருந்தார்.
அது சம்பந்தமாக பேசுவோம் வா என்று ராஜேந்திரனை வீரராஜன் அழைத்துச் சென்று அவரை தீர்த்துக் கட்டி விட்டார்.
இவ்வாறு சாஸ்திரக்கனி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வீரராஜன், அவரது கூட்டாளிகள் வேணுகோபால், முருகன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பசுபதி என்பவரை தேடி வருகிறார்கள்.
ராஜேந்திரனை கொலை செய்தது எப்படி என்று வீர ராஜன் கூறியதாவது:-
எனக்கும், சாஸ்திரகனிக்கும் இடையேயான கள்ளக் காதலை ராஜேந்திரன் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். அவர் மாமியாரை தீர்த்துக்கட்ட என்னிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து இருந்தார்.
அது சம்பந்தமாக பேசுவோம் என்று ராஜேந்திரனை திருத்தணிக்கு காரில் அழைத்துச் சென்றேன். என்னுடன் நண்பர்கள் பசுபதி, முருகன், சதீஷ், வேணுகோபால் ஆகியோரும் வந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கே.கே.புரம் எல்லப்ப நாயுடு பேட்டை சுடுகாடு அருகில் வந்ததும் காரை நிறுத்தி பசுபதியும், முருகனும் மது குடித்தனர். அப்போது நான் ராஜேந்திரனிடம் தகராறு செய்தேன். இந்த நேரத்தில் போதையில் இருந்த பசுபதியும், முருகனும், ராஜேந்திரனை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டினார்கள்.
பின்னர் பிணத்தை சுடு காட்டில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டோம்.
இவ்வாறு வீரராஜன் கூறினார்.
இந்த வழக்கில் ராஜேந்திரனின் செல்போன் மூலம் துப்பு துலங்கியது. அவரது காணாமல் போன செல்போனை யார் பயன்படுத்துகிறார்கள் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது தான் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரிய வந்தது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 12:05.19 PM ] |
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். [மேலும்] | | சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார்: எல்.கே. சுதீஸ் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:44.02 AM ] |
அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக அமர்வார் என்று எல்.கே. சுதீஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அயோத்தியில் மீண்டும் பதற்றநிலை வாய்ப்பு |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:25.49 AM ] |
பிரச்சினைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது. இதனால் மீண்டும் அங்கே பதற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகர் சந்திரசேகர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:31.14 PM ] |
அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சந்திரசேகர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | அன்னை தெரசா உருவ நாணயம் வெளியீடு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 08:21.25 AM ] |
அன்னை தெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறித்த 5 நாணயத்தை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|