| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| போலீஸின் அலட்சியத்தாலே என் மகன் கொலை: ராஜேந்திரன் தாயார் |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:39.40 PM GMT +05:30 ] |
நான் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ள வில்லை. அன்று கிண்டி போலீசார் சரியாக விசாரித்து இருந்தால் இன்று எனது மகன் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது. பின்னர் மார்ச் மாதம் 25-ந்தேதி அலுவலகம் சென்று விடுமுறை கேட்டு விட்டு வருவதாக கூறி சென்றான். அதன் பிறகு இதுவரை வீட்டுக்கு திரும்ப வில்லை என்று ராஜேந்திரனின் தாயார் தெரிவித்துள்ளார். |
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையுண்ட ராஜேந்திரனின் தாய் செல்லம்மாள் நேரு நகர் பெரியார் தெருவில் வசித்து வருகிறார். கணவரை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர் மகன் இறந்த தகவல் கிடைத்ததும் கண்ணீர் விட்டு கதறினார். நிருபர்களிடம் செல்லம்மாள் கூறியதாவது:-
எனக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் 2-வது மகன். மின் வாரியத்தில் அதிகாரியாக பணி புரிந்தான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது வீட்டு அருகில் வசித்து வரும் அனிதாவின் தாய் பாக்கியம் ராஜேந்திரனை மாப்பிள்ளை கேட்டு வந்தார்.
அனிதா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததால் இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் பாக்கியம் எங்களை எப்படியோ மயக்கி சம்மதிக்க வைத்து விட்டார். எனது மகன் ராஜேந்திரனுக்கும் திருமணத்தில் இஷ்டம் இல்லாமல் இருந்தது. அவனுடன் 1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்த சாஸ்திரகனியை காதலித்து வந்தான். அவரும் ராஜேந்திரனை காதலித்தார். ஆனால் சாஸ்திரகனியின் பெற்றோர் அவளை வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
இதனால் மனவருத்தத்தில் இருந்த அவன் திருமணமே வேண்டாம் என்று கூறி வந்தான். நான் கட்டாயப்படுத்தியதால் தான் அனிதாவை திருமணம் செய்ய சம்மதித்தான். ஒரு வாரம் கூட அவளுடன் அவன் குடும்பம் நடத்தவில்லை.
எனது மகன் பிரிந்து வந்து விட்டான். இதன் பிறகு பாக்கியம் குடும்பத்தினர் எங்கள் மீது கோபத்தில் இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.
அன்று நள்ளிரவு கிண்டி ரவுண்டானாவில் வைத்து ஹெல்மட் அணிந்திருந்த ஒரு கும்பல் அவனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது. அடித்து முடிந்ததும் ராஜேந்திரன் உயிரோடு இருக்கிறானா என்று பாருங்கள் என அதில் ஒருவன் கூறியுள்ளான். இதனால் எனது மகன் இறந்தது போல் நடித்துள்ளான். இல்லையெனில் அன்றே அவனை கொன்று இருப்பார்கள்.
இது குறித்து கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். பாக்கியம் குடும்பத்தினரும் மறுநாள் கிண்டி போலீஸ் நிலையம் வந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக என் மகன் மீது புகார் கொடுத்தனர்.
நான் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ள வில்லை. மாறாக என் மகன் மீதே குற்றம் சாட்டினர். அன்று கிண்டி போலீசார் சரியாக விசாரித்து இருந்தால் இன்று எனது மகன் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது. பின்னர் மார்ச் மாதம் 25-ந்தேதி அலுவலகம் சென்று விடுமுறை கேட்டு விட்டு வருவதாக கூறி சென்றான். அதன் பிறகு இதுவரை வீட்டுக்கு திரும்ப வில்லை.
அவனது மோட்டார் சைக்கிள் மட்டும் மறுநாள் அனாதையாக கிடந்தது. இதனால் பயந்து போய் வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் மாயமானது குறித்தும் அவன் ஏற்கனவே தாக்கப்பட்டது குறித்தும் புகார் செய்தேன். அங்கு இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்து விட்டார். இதனால் ஏப்ரல் 10-ந்தேதி ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவை வக்கீல் மதுசூதனன் மூலம் தாக்கல் செய்தேன். எனது மகனை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்ட பின்னரே போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.
அதற்குள் எனது மகனை பாவிகள் கொன்று விட்டார்கள்.
இவ்வாறு செல்லம்மாள் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு உறுதி |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 12:05.19 PM ] |
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நெடுசெழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். [மேலும்] | | சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார்: எல்.கே. சுதீஸ் |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:44.02 AM ] |
அடுத்ததாக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் 14வது முதல்வராக வருவார். அவருக்கு எப்போதும் 5ஆம் எண் ராசியானது. அதற்காக அ.தி.மு.க, ,தி.மு.க தவிர்த்த பிற கட்சிகள் தே.மு.தி.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக அமர்வார் என்று எல்.கே. சுதீஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அயோத்தியில் மீண்டும் பதற்றநிலை வாய்ப்பு |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 11:25.49 AM ] |
பிரச்சினைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தமா? அல்லது முஸ்லிம்களுக்கு சொந்தமா? என்பது குறித்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு கூறப்பட இருக்கிறது. இதனால் மீண்டும் அங்கே பதற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நடிகர் சந்திரசேகர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:31.14 PM ] |
அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் சந்திரசேகர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | அன்னை தெரசா உருவ நாணயம் வெளியீடு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 08:21.25 AM ] |
அன்னை தெரசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரது உருவம் பொறித்த 5 நாணயத்தை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|