இலங்கைச் செய்தி
இலங்கைக்கு இந்தியா எவ்வித உதவியும் செய்யக்கூடாது: தா.பாண்டியன்
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 02:58.19 PM GMT +05:30 ]
இலங்கையில் சுமூகமான அரசியல் தீர்வு ஏற்படும் வரை இந்தியா ஆயுத உதவி உள்பட எந்த உதவிகளையும் செய்யக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முல்லை பெரியாறு பிரச்சினை வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. அணை பற்றிய விவரங்களை சேகரிக்க ஐவர் குழு ஒற்றை நியமித்துள்ளது. கேரளா சார்பில் ஒருவரும், தமிழகத்தின் சார்பில் ஒரு வரும் சேர வேண்டும். ஆனால் தி.மு.க. செயற் குழுவில் தமிழகத்தின் சார்பில் குழுவில் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். இது தமிழ்நாட்டின் நலனுக்கு உதவியாக அமையாது. முல்லை பெரியாறு வழக்கில் மேல் விவரங்களை சேகரிக்க தமிழக அரசு பிரதிநிதி பங்கேற்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களை இன்றைக்கும் சிங்கள ராணுவம் சித்ரவதை செய்து வருகிறது. உலக நாடுகள் பலவும் இந்த மனித உரிமை மீறலை கண்டித்து பிறகும் முகாம்கள் மூடப்பட வில்லை.

இலங்கை தமிழர்கள் அவர்கள் வசித்த இடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும். இலங்கையில் சுமூகமான அரசியல் தீர்வு ஏற்படும் வரை இந்தியா ஆயுத உதவி உள்பட எந்த உதவிகளையும் செய்யக்கூடாது.

யானை மலையை குடைவதை கண்டித்து 4-ந் தேதி ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

விலைவாசி உயர்வை கண்டித்து இடது சாரிகள் சார்பில் வருகிற 15-ந்தேதி பாராளுமன்றத்தின் முன் போராட்டம் நடைபெறும்.

விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டி வற்புறுத்தி அழைப்பது அநாகரீக செயல். நடிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு.

தமிழக அரசு இதுவரை யார்-யாருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும். இல்லையெனில் வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூடும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்