இலங்கைச் செய்தி
கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 05:52.27 AM GMT +05:30 ]
கச்சத்தீவில் வரும் 27, 28ம் தேதிகளில் நடக்கும் அந்தோணி யார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள ராமேஸ் வரம் பகுதி மீனவர்களும், பக்தர்களும் தயாராகி வரு கின்றனர். அவர்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
இந்திய& இலங்கை கடல் எல்லையில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்திய பகுதியில் இருந்த இது, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது இருநாட்டு மீனவர்களும் இங்கு வலைகளை உலர்த்தி கொள்ளவும், புனித அந்தோணியார் ஆலய விழாவில் இருநாட்டு மீனவர்களும், பக்தர்களும் கலந்து கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்பேரில், கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடக்கும் விழாவில், சப்பரபவனி, கூட்டுப்பிரார்த்தனை, சிறப்பு ஆராதனை, சொற்பொழிவு போன்றவை நடக்கும். இதில் இருநாட்டினரும் கலந்து கொள்வர்.

இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளாக, போர் உச்சத்தில் இருந்ததால், கச்சத்தீவு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது போர் முடிந்த நிலையில், கச்சத்தீவில் வரும் 27, 28ம் தேதிகளில் திருவிழா நடக்கிறது.

இதில் பங்கேற்குமாறு, ராமேஸ்வரம் பங்குத்தந்தை மைக்கேல்ராஜுக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் சவுந்தரநாயகம் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். எனவே, தமிழக மக்கள் அங்கு செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரிய போது, ‘மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையடுத்து, ராமேஸ்வரம் பங்குதந்தை மைக்கேல்ராஜ் மற்றும் மீனவர்கள், சென்னையில் உள்ள இலங்கை தூதரக துணை அதிகாரி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இலங்கையில் சுமுகநிலை நீடிப்பதால் கச்சத்தீவுக்கு பக்தர்கள் செல்ல தடையிருக்காது என்றும், மத்திய அரசுடன் பேசி அனுமதி பெற்றுத் தருவதாகவும் தூதரக அதிகாரிகள் உறுதியளித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதன்பேரில், வரும் 27, 28 தேதிகளில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தயாராகி வருகின்றனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்