அறிக்கை
அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன்? ராமதாஸுக்கு கருணாநிதி கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:34.34 AM GMT +05:30 ]
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை பதவி விலகச் சொல்லாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சியைக் கேடயமாகப் பயன்படுத்தலாமே என்று வெள்ளிக்கிழமை ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:


ராமதாஸின் முக்கிய குறிக்கோளே திமுக ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான். கடைசிவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே அமைச்சராக பதவிச் சுகம் அனுபவித்துவிட்டு, அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துவிட்டுப் போனவர் ராமதாஸ். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலே கூட்டணி என்று ஆசை வார்த்தை கூறி அந்தக் கட்சியை அதிமுகவின் பக்கம் இழுக்க படாதபாடுபட்டு அதற்காக ஜெயலலிதா மூலம் காங்கிரஸுக்கு அழைப்புவிடச் செய்தவர். ஆனால் காங்கிரஸின் உறுதியான நிலையால் ஏமாற்றம் அடைந்து தற்போது இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் ஆட்சியை இழக்கக் கூடாது என்கிறார்.

தமிழீழம் மலருமானால் மூன்றாவது முறையாகக் கூட பதவியை இழக்கத் தயார் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்துள்ளேன். திமுக பதவி விலக வேண்டும் என்பதில் குறியாக உள்ள ராமதாஸ், இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு சரியில்லை என்று கூறி மத்திய அமைச்சராயிருந்த தனது மகன் அன்புமணியை ராஜிநாமா செய்யச் சொல்லியிருக்கலாமே.

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளதாகக் குறிப்பிடும் வைகோவைத் தவிர வேறு எவரும் துரோகத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியானவராக இருக்க முடியாது. ஏனெனில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்த கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே சென்றவர் வைகோ. பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இதற்காக தூதரக நடைமுறைப்படி அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும், பிரபாகரன் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதிமன்றத்தில் உரிய விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.

பிரபாகரனைப் பிடித்து நாடுகடத்த முடியவில்லை எனில், இலங்கை அரசின் உதவியோடு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை சிறைப்பிடிக்க மத்திய அரசை தமிழக சட்டப் பேரவை மூலம் கேட்டுக் கொண்டவர் ஜெயலலிதா. இலங்கைப் பிரச்னையில் இந்தியா ஓரளவிற்குத்தான் தலையிட முடியும் என்று சொன்னவர்தான் ஜெயலலிதா. இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் தொலைபேசி மூலம் இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பேசியுள்ளார். இலங்கைத் தமிழர்களைக் காக்க எல்லோரும் அக்கறை காட்டிவருவது உண்மைதான். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகள் மீது குறை கூறுவதில் இன்பம் கண்டு வருகிறார்கள்.

இலங்கை ராணுவம் தமிழர்களை வீழ்த்துவதற்கு ராஜபட்ச அரசுக்கு உதவும் "அம்பி" யார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா. பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார். ராஜபட்சவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அவருக்கு துணை போயிருப்பவர் பாண்டியன். இப்போது யார் "அம்பி" என்ற உண்மை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்