| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| போலி சாமியார் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்: பாஜக |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:21.57 PM GMT +05:30 ] |
போலி சாமியார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். |
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நேற்று பெரம்பலூரில் நடந்தது. தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், கோட்டப் பொறுப்பாளர்கள் திருச்சி திருமலை, தஞ்சை அய்யாரப்பன், பெரம்பலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் விலைவாசி கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. உற்பத்தி செய்த விவசாயிக்கு கொஞ்சமாகத்தான் கிடைக்கிறது. இடைத்தரகர்கள்தான் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் கொள்ளை நடக்கிறது. இதை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜ கையெழுத்து இயக்கம் நடத்துகிறது.
போலி சாமியார்கள் மீது பாரபட்சமின்றி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில், ஆந்திராவில், வட மாநி லங்களில் சாமியார்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளது போலவே, கேரளாவில் கிறிஸ்தவ பாதிரியார் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே பாரபட்சமின்றி, மதபாகுபாடின்றி, சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|