| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்ற மூவர் கைது |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:41.38 PM GMT +05:30 ] |
கோவையில் நடைபெற்ற உலகத்தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
புதிய தமிழகம் கட்சி சார்பில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வஉசி பூங்கா மைதானத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் நடக்கும் என்று கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி வழங்கினர்.
மாநாடு துவங்கிய நாளிலேயே மாநாட்டு வளாகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக சிடி, உருவப்படங்கள் விற்பனை நடந்ததைக் கண்ட போலீசார் எச்சரித்தனர். நிறைவு நாளான நேற்றும் தடை மீறி சி.டி விற்பனை நடந்தது. அவற்றை ரேஸ்கோர்ஸ் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தடையை மீறி விற்ற விழுப்புரம் பெரியார் நகரைச் சேர்ந்த ஆதம்(53), மதுரை நேதாஜி நகரைச் சேர்ந்த பரமன்(43), மதுரை திருநகரைச் சேர்ந்த தமிழரசன்(32) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விற்பனையில் ஈடுபட்ட சரவணன், தயாளன், இளங்கோ, டார்வின், கரையான் செல்வராஜ், சுப்பு ரெட்டியார் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்கள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|