இந்தியச் செய்தி
மாவோயிஸ்ட் போராளிகளால் இன்றும் ரயில் பாதை தகர்ப்பு
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:58.43 PM GMT +05:30 ]
மூன்று நாள் தொடர் பந்த் நடத்தும் மாவோ போராளிகள் இன்றும் ரயில் பாதையை குண்டு வைத்து தகர்த்தனர்.
நக்சலைட்கள் மீது ‘ஆபரஷேன் கிரீன் ஹன்ட்’ என்ற தாக்குதலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜார்கண்ட், பீகார், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்று முதல் 72 மணி நேரம் பந்த் நடத்தப்படும் என மாவோ தீவிரவாதிகள் அறிவித்திருந்தனர்.

பீகார் மாநிலத்தின் ஜாமுயி மாவட்டத்தில் நார்கன்ஜோ என்ற இடத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்ட்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர். இதில் 5 அடி நீளத்துக்கு ரயில் பாதை சேதம் அடைந்தது. இதனால் ஹவுரா & டெல்லி இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரிசா மாநிலம் ரூர்கேலா அருகே பலுலதா மற்றும் ஜரேகேலா என்ற இடத்துக்கு இடையேயுள்ள ரயில் பாதையை மாவோ தீவிரவாதிகள் இன்று அதிகாலை 1 மணியளவில் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் அந்த வழியாக சென்ற சரக்கு ரயிலின் இரு பெட்டிகள் தடம்புரண்டன. இச்சம்பவத்தையடுத்து ஹவுரா&மும்பை இடையேயான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து டெல்லியில் கடந்த இரு நாட்களாக நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் நக்சல்களை ஒடுக்குவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பேசினர். ஆனால், மாவோ தீவிரவாதிகள் இன்றும் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்