தமிழ்நாட்டுச் செய்தி
சென்னையில் பிரபல ரவுடிகள் இருவர் போலீஸாரால் சுட்டுக்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:23.16 AM GMT +05:30 ]
சென்னையில் போலீசாருடன் நடந்த மோதலில் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியும் அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவன் பாண்டி. இவன் மீது 10 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, 2 வெடிகுண்டு வழக்கு உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பயங்கர ரவுடியான திண்டுக்கல் பாண்டி, கடைசியாக கே.கே.நகரில் திவாகர் என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தேடப்பட்டு வந்தான். ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவன். எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பான்.

பாண்டியை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், மகேந்திரன், எஸ்.ஐ.க்கள் ரவிக்குமார், மகேஷ்குமார் உட்பட 12 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பாண்டியை தனிப்படையினர் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஈரோடு திண்டல் என்ற இடத்தில் பாண்டி பதுங்கி இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சுற்றி வளைத்தபோது பாண்டியும் அவனது கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் ஸ்கார்பியோ காரில் தப்பினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். தப்பி ஓடிய இருவரும் நேற்று பிற்பகல், சென்னையை அடுத்த நீலாங்கரையில் சென்றுகொண்டிருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதனால், தனிப்படையினர், கிழக்குக் கடற்கரை சாலையில் விஜிபி கோல்டன் பீச் அருகே காத்திருந்தனர்.

பிற்பகல் 3.15 மணிக்கு பாண்டியின் கார் செல்வதைப் பார்த்ததும் போலீசார் விரட்டினர். போலீசாரை பார்த்த பாண்டி, பனையூர் 10வது அவென்யூவில் காரை திருப்பினான். போலீசார் காரில் விரட்டிச் சென்று மறித்தனர். போலீசாரின் கார் மீது பாண்டியின் கார் மோதியது.
உடனே, காரை ஓட்டி வந்த வேலுவிடம், ‘அவங்கள வெட்டுடா’ என்று பாண்டி கத்தினான். காரில் இருந்து இறங்கிய போலீசார், இருவரையும் பிடிக்க முயன்றனர். பயங்கர கத்தியால் வேலு வெட்டியதில் ஏட்டு பிரேம்குமாரின் கையில் வெட்டு விழுந்தது. எஸ்.ஐ.க்கள் மகேஷ்குமார், ரவிக்குமார் ஆகியோரையும் வேலு வெட்டினான். இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், ‘‘ஒழுங்காக சரணடைந்துவிடுங்கள்’’ என்று எச்சரித்தார்.

பாண்டி தன்னிடம் இருந்த இத்தாலி நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி 3 முறை சுட்டான். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசினான். அது சுமோவில் பட்டு வெடித்தது. இதிலும் யாருக்கும் காயம் இல்லை. மற்றொரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது.

இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், மகேந்திரன் ஆகியோர் பாண்டி, வேலு இருவரையும் சுட்டுத் தள்ளினர். பின்னர் 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். காயமடைந்த போலீசாரையும் ரவுடிகளையும் ஏற்றிக் கொண்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரவுடிகள் இருவரும் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தகவல் கிடைத்ததும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர்கள் பெரியய்யா, திருஞானம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆர்டிஓ செந்தில்குமார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தாலி ரக துப்பாக்கி, கத்தி, ஒரு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டன.

பனையூர் 11வது அவென்யூவில்தான் கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வீட்டுக்கு நேர் பின்புறம்தான் இந்த மோதல் நடந்தது. இதனால் பனையூர் பகுதியில் நேற்று மாலை முதல் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்