இந்தியச் செய்தி
பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:12.52 PM GMT +05:30 ]
டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தனக்கு அடைக்கலம் கொடுத்ததாக தொடர் குண்டுவெடிப்பில் கைதான தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி 5 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 30 பேர் இறந்தனர். 90 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசாருக்கு பாட்லா நகரில் ஒரு வீட்டில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து 2008 செப்டம்பர் 19ம் தேதி பாட்லா வீட்டை டெல்லி போலீஸ் சுற்றி வளைத்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார்கள்.

பதுங்கியிருந்த தீவிரவாதிகளில் ஷாகத் மற்றும் அசிஸ் ஆகிய இரண்டு பேர் தப்பினர். இவர்களில் ஷாகத் அண்மையில் உ.பி.யில் கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள் கிழமை டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், பாட்லா வீட்டிலிருந்து வெளியேறியபின் டெல்லியில் உள்ள மாஜி எம்எல்ஏ ஒருவர் அடைக்கலம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

பாட்லா வீட்டை போலீசார் முற்றுகையிட்டு முன்பக்க கதவை தட்டினார். பால்கனி வழியாக வெளியில் எட்டிப்பார்த்தபோது போலீசார் சுற்றி வளைத்திருப்பது தெரிந்தது. துப்பாக்கி சண்டை மூண்டது. பொதுமக்கள் அலறி அடித்து ஒடினர். அவர்களில் ஒருவராக நானும் அசிசும் பின்பக்க வழியாக படிக்கட்டில் இறங்கி தப்பினோம். ஆட்டோரிக்ஷாவில் ஏறி ஷாகீன்பாக் சென்றோம். எங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். கையில் காசு இல்லை என்றோம். அவர் எங்களுக்கு பணம் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து ரயில் வழியாக அலிகார் சென்றோம். அங்கிருந்து லக்னோ, பிறகு அசம்கார் சென்றோம். அசம்காரில் நானும் அசிஸூம் பிரிந்தோம்.

இவ்வாறு ஷாகத் கூறியுள்ளார். பீகாரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரது பெயரையும், மும்பை அரசியல்வாதி ஒருவர் பெயரையும் தனது வாக்குமூலத்தில் ஷாகத் குறிப்பிட்டுள்ளார். ஷாகத் குறிப்பிட்டுள்ள மாஜிஎம்எல்ஏ, மந்திரி, அரசியல்வாதி பெயர்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். தற்போது அந்த எம்எல்ஏ நொய்டாவில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்