இந்தியச் செய்தி
4 மாநிலங்களில் பந்த்: வெடிகுண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு; மாவோயிஸ்டுகள் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:37.25 AM GMT +05:30 ]
மாவோயிஸ்டு தீவிரவாதிகளை ஒழிப்பது தொடர்பாக மத்திய மந்திரி ப.சிதம்பரம் நாளை கொல்கத்தாவில் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் 4 மாநிலங்களிலும் இன்றும் நாளையும் 72 மணி நேர “பந்த்”துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதனால் நேற்று இரவு முதல் 4 மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனாலும் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். பீகார் மாநிலம் ஜாமுயி மாவட்டத்தில் ரெயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். ரஜிலா-நார்கஞ்சோ ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த தாக்குதல் நடந்தது. சுமார் 40 தீவிரவாதிகள் திரண்டு வந்து தண்டவாளத்தில் குண்டை வெடிக்க செய்தனர்.

இதில் 2 1/2 அடி நீளத்துக்கு தண்டவாளங்கள் தகர்ந்தது. 5 அடி நீளத்துக்கு ரெயில் பாதை முழுவதும் சேதம் அடைந்தது. அந்த இடத்துக்கு மத்திய ரிசர்வ் போலீசாரும், ரெயில்வே போலீசாரும் விரைந்தனர். அதற்குள் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். இது டெல்லி-கொல்கத்தா இடையே உள்ள முக்கிய ரெயில் பாதையாகும். குண்டு வெடிப்பால் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

முழு அடைப்பை ஒட்டி இந்த பாதையில் செல்லும் 12 ரெயில்கள் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டு இருந்தன. பல ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.
எனவே தண்டவாளம் தகர்க்கப்பட்டாலும் ரெயில் விபத்து எதுவும் ஏற்பட வில்லை. தண்டவாளத்தை சரி செய்யும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்