தமிழ்நாட்டுச் செய்தி
சாலையை விரிவுபடுத்தக்கோரி இரவில் மறியல் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:26.41 PM GMT +05:30 ]
அன்னூர் அருகே பாலத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பயணிகள் காயம் அடைந்தனர். அடிக்கடி விபத்து நடப்பதால் குறுகிய சாலையை விரிவுபடுத்தக் கோரி நள்ளிரவில் கிராம மக்கள் மறியல் செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவையில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு மைசூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 50&க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அன்னூர் அருகே திண்டுக்கல் & மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவில் ஒரு குறுகிய பாலத்தில் சென்றபோது, பஸ் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தலைகுப்புற பஸ் கவிழ்ந்ததால் பயணிகள் அலறினர். டிரைவர் சுப்பிரமணி (50) உள்பட 40 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். பஸ்சுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டு புஞ்சைபுளியம்பட்டி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ‘அன்னூர் முதல் புஞ்சைபுளியம்பட்டி வரை ரோடு பழுதடைந்துள்ளது. 10&க்கும் மேற்பட்ட குறுகிய பாலங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 16 பேர் பலியாகி உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும், பாலம் அகலப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் கோவை வடக்கு தாசில்தார் சுந்தர்ராஜன், பெ.நா.பாளையம் டிஎஸ்பி மாரியப்பன் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 2 வாரங்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்