தமிழ்நாட்டுச் செய்தி
இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் விதிகளை மீறவில்லை: ஜெயபால் எம்.எல்.ஏ.
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:23.50 AM GMT +05:30 ]
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் விதிகளை மீறவில்லை என்று ஜெயபால் எம்.எல்.ஏ. விளக்கமளித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நாகர்கோவிலில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த போது நவீன் என்பவருக்கும், ஜோ என்பவருக்கும் திடீர் பிரச்சினை மூண்டது. அது வாக்குவாதமாக மாறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நவீனும், ஜோவும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளனர். எனவே வார்டு தலைவர்கள் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்களை அதிக அளவில் வெற்றி பெற செய்ய இருவரும் முயற்சித்து வருகிறார்கள்.

இதில் நவீன் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபாலின் அக்காள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நவீன் ஆதரவாளர்கள் வெற்றி பெற ஆதரவாக ஜெயபால் செயல்பட்டதாக ஜோ தரப்பினர் புகார் கூறினார்கள்.

இதுபற்றிய தகவலை தேர்தல் பார்வையாளர்கள் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்தனர். அவர்கள் மாநில தலைமைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெயபாலுக்கு விளக்கம் கேட்டு மாநில தலைவர் தங்கபாலு நோட்டீசு அனுப்பினார்.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் கட்சியின் விதிகளுக்கு முரணாக செயல்பட்டதற்கு ஆதாரங்கள் கிடைத்து உள்ளன, உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்று அதில் கோரியிருந்தார்.

இதுபற்றி ஜெயபால் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கட்சியின் மேலிடம் எனக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசு இதுவரை என் கையில் கிடைக்கவில்லை. இருப்பினும் பத்திரிகையின் மூலம் எனக்கு கிடைத்த தகவல்படி நாகர்கோவிலில் மோதல் நடந்தபோது நான் சம்பவ இடத்தில் இருக்கவில்லை.

குளச்சல் தொகுதிக்குள் சுற்றுபயணம் மேற்கொண்டிருந்தேன். இளைஞர் காங்கிரசில் எந்த கோஷ்டிக்கும் நான் ஆதரவாக செயல்பட்ட தில்லை. யாரையும் ஊக்கு வித்ததும் இல்லை. என்மீது கட்சி மேலிடம் குற்றம் சாட்டி இருந்தால் அதற்கு நான் உரிய விளக்கம் அளிப்பேன். கட்சியின் சட்ட விதிகளை மீறவில்லை என்பதையும் தெளிவுபடுத்துவேன். கட்சியின் வளர்ச்சியில் மட்டும் தான் எனக்கு நாட்டமுண்டு என்பதை மேலிடத்துக்கு புரிய வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்