இந்தியச் செய்தி
கோவா கடற்கரையில் நீச்சல் உடைக்கு தடையில்லை: அரசு அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:32.23 AM GMT +05:30 ]
வெளி நாட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதற்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் சென்று வர தடை இல்லை என்று கோவா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் கோவா கடற்கரை மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. அங்குள்ள அழகான கடற்கரையும், தட்ப வெப்பமும் வெளிநாட்டவர்களை மிகவும் கவந்திழுக்கிறது.

கோவாவுக்கு ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் பேர் சுற்றுலா வந்து செல்கிறார்கள். அவர்களில் சுமார் 5 லட்சம் பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

கோவாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சூரிய குளியலுக்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் உலா வருவதும், படுத்து இருப்பதும் வழக்கமாகும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீச்சல் உடையில் சுற்றுவதால் செக்ஸ் குற்றங்கள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கோவா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

என்றாலும் வெளி நாட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதற்காக நீச்சல் உடையில் கடலோரத்தில் சென்று வர தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் உடையில் இருக்கும் வெளிநாட்டவர்களை யாரும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக போலீஸ் ரோந்து கண்காணிப்பு பணிக்கும் கோவா அரசு ஏற்பாடு செய்துள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்