தமிழ்நாட்டுச் செய்தி
கல்கி ஆசிரமத்தை மூட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 01:59.37 PM GMT +05:30 ]
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கல்கி ஆசிரமத்தை இழுத்து மூடவேண்டும் என ஆந்திர அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சித்தூர் மாவட்டம் வரதய்யாபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமம் மீது மோசடி புகார் மற்றும் பெண்களுக்கு போதை லேகியம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கடந்த சில நாட்களுக்கு ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், கல்கி ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எம்எல்சி ராமய்யா தலைமையில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். முன்னதாக அக்கட்சியினர் கல்கி ஆசிரமப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நெலவாய், காம்பாகம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். அப்போது அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தங்களது விவசாய நிலங்களை கல்கி ஆசிரமத்தினர் மிரட்டி ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டினர்.

பின்னர் எம்எல்சி ராமய்யா அளித்த பேட்டி:

கல்கி ஆசிரம விவகாரம் குறித்து விரைவில் ஆந்திர முதல்வருக்கு முழு விவரங்களும் அறிக்கையாக அளிக்க உள்ளேன். அதன்பேரில் ஒரு மாதத்துக்குள் ஆசிரமம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு நிலங்களை பிரித்து ஏழைகளுக்கு வழங்கும் செயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இறங்கும். சட்டவிரோத செயல்களில் இந்த ஆசிரமம் ஈடுபடுவதால் இதை உடனடியாக இழுத்து மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்