தமிழ்நாட்டுச் செய்தி
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:21.09 PM GMT +05:30 ]
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது பெற்றோரே கடத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் சம்மதத்துடன் மறுபடி கோயிலில் திருமணம் நடந்துள்ளது.
வியாசர்பாடி எம்கேபி நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திக் (21). தனியார் கம்பெனி ஊழியர். உதயசூரியன் நகர் 20வது பிளாக்கில் வசிக்கும் மஞ்சுளா(19) என்பவரை கார்த்திக் காதலித்தார். இருவரும் சர்மா நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 10 நாள் முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கார்த்திக் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு காரில் ஒரு கும்பல் வந்தது. திபுதிவுவென வீட்டுக்கு புகுந்து, கார்த்திக்கை தாக்கியுள்ளனர். பின்னர், மஞ்சுளாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த கார்த்திக் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து துணை கமிஷனர் பாஸ்கரனிடம் கார்த்திக் புகார் செய்தார். எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் ஷ்யாம் வின்சென்ட் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுளாவை கடத்தி சென்ற கும்பலை தேடினார். விசாரணையில், மஞ்சுளாவின் பெற்றோரே அவரைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர்களே தங்களது பெண்ணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இரு தரப்பினரையும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். கணவனுடன்தான் செல்வேன் என்று மஞ்சுளா கூறியதால், அவரை கார்த்திக்குடன் போலீசார் அனுப்பி வைத்தனர். மஞ்சுளாவின் பெற்றோரை எச்சரித்து அனுப்பினர். பின்னர், காதல் ஜோடிக்கு கார்த்திக்கின் பெற்றோர் வியாசர்பாடி சக்தி மாரியம்மன் கோயிலில் இன்று காலை முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்