| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா; சேலத்தில் இன்று மாலை நடக்கிறது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 09:03.17 AM GMT +05:30 ] |
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் பொது வாழ்விற்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பில் பாராட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
|
சேலம் சாரதா கல்லூரி ரத்னவேல் திருமண மண்டபத்தில் பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருச்சி சிவா எம்.பி., கவிஞர் பிறைசூடன், முனைவர் அவ்வை நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். இரவு 7 மணிக்கு நடக்கும் பாராட்டு விழாவிற்கு பொன்விழா குழு தலைவர் பேராசிரியர் திராஜ்லால் தலைமை தாங்குகிறார். சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி முன்னிலை வகிக்கிறார் . மத்திய இணை மந்திரி நெப்போலியன், நடிகர் ராதாரவி, சிறப்புரையாற்றுகிறார்கள். டாக்டர் அர்த்தனாரி, கே.ஒய்.பாஷா, ராஜேந்திர பிரசாத், எஸ்.தேவராஜன், ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். இறுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்புரை நிகழ்த்து கிறார். அவருக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. முடிவில் ரவீந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக தமிழ் அறிஞர்கள் எழுஞாயிறு, பெ.வேலு, தமிழ்நாடன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. கே.பி.சேகர் விழாவை தொகுத்து வழங்குகிறார். சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|