தமிழ்நாட்டுச் செய்தி
1126 மையங்கள் மூலம் சென்னையில் 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 09:13.06 AM GMT +05:30 ]
நாடு முழுவதும் 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. சென்னையில் மேயர் மா.சுப்பிரமணியன் அமைந்தகரையில், கலெக்டர் காலனியில் உள்ள மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயசங்கர் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் கலைஞர் 10.01.2010 அன்று போலியோ சொட்டு மருந்தினை வழங்கி, தமிழகத்தில் 70 இலட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணையாக தொடங்கி வைத்தார்கள். முதல் தவணையாக சென்னையில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 224 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 5 இலட்சம் குழந்தைகளுக்கு மேல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலியோ நோயை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அவர்களின் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்குச்சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்தவுடன் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த ஒரு குழந்தையும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதில் விடுபடாமல் இருப்பதற்கு அடையாள மை வைக்கப்படுகிறது. இதனால் எந்த விதமான தீமையும் இல்லை. ஒரு சில குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விடுபட்டுப்போனால் கூட இந்த கொடிய போலியோ நோயை ஒழிப்பது சாத்தியம் ஆகாது.

வழக்கமாக தடுப்புபூசி போடும்போது வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தான் கூடுதல் தவணையாக வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சொட்டு மருந்து மையங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, சர்க்கஸ், புறநகர் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரம் நடமாடும் சொட்டு மருந்துமையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்ப வர்கள் இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சொட்டு மருந்து முகாம்களில் சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, துணை ஆணையர் ஜோதிநிர்மலா, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், மண்டலக்குழுத்தலைவர் சுரேஷ்பாபு, சுகாதார அலுவலர் டாக்டர் குகானந்தன், கூடுதல் சுகதார அலுவலர் தங்கராஜ், மாவட்ட குடும்ப நல அலுவலர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்