இந்தியச் செய்தி
எந்த ரூபத்தில் வந்தாலும் பாக். தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவோம்; ப.சிதம்பரம் ஆவேசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:42.57 AM GMT +05:30 ]
டெல்லியில் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
நாம் எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாதிகள் தாக்குதல்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம். இன்னும் அதிக கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசுகள் போலீஸ் படையை திறம்பட உருவாக்க வேண்டும். எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் அளவில் நமது போலீஸ் படைகள் இருக்க வேண்டும். அதற்கு உரிய பயிற்சிக்கும், தேவையான ஆயுதங்களும் கருவிகளும் அவசியம்.

எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்ந்து அதிகரிக்கிறது. லஷ்கர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளே இந்தியாவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் கூடி பேசி இருக்கிறார்கள். இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், எந்த வழியில் வந்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். அவர்களை நாம் ஒழித்து கட்டுவோம். கடந்த 14 மாதங்களாக இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் எதுவும் நடக்க வில்லை. ஆனாலும் இன்னும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நீடிக்கிறது. எனவே விழிப்போடு இருந்து அவற்றை முறியடிக்க வேண்டும்.

நக்சலைட்டுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. மாநில அரசுகள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அதே நேரத்தில் அவர்களை துணிச்சலோடு எதிர் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்