இந்தியச் செய்தி
மும்பை குண்டு வெடிப்பு: 17 ஆண்டுகள் தேடப்பட்ட தீவிரவாதி பிடிபட்டான்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:48.40 AM GMT +05:30 ]
மும்பையில் 1993-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் கும்பல் தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 பேர் காயம் அடைந்தனர்.இதில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் இன்னும் கைது செய்யப்படாமலேயே உள்ளனர்.
இதில் ஒரு தீவிரவாதி தான் அப்துல் ரஷீத். மும்பையில் தாதாவாக செயல்பட்டு வந்த இவன் குண்டுவெடிப்புக்கு தேவையான ஆயுதங்களை கடத்தி வந்தான்.மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் இவன் தலைமறை வாகி விட்டான். நாடு முழுவதும் வலை விரித்தும் சிக்க வில்லை. தொடர்ந்து தேடப்பட்டு வந்தான். அவனைப்பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக சி.பி.ஐ. அறிவித்து இருந்தது. 17 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த அவன் கடந்த 3-ந்தேதி மும்பை வந்தான். நியூ மும்பையில் உள்ள கோபா ஹரீன் என்ற இடத்தில் ரகசியமாக பதுங்கி இருந்தான். ஆனால் இதை மும்பை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். பின்னர் அவனை மும்பை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்துல் ரஷீத் மும்பை குண்டு வெடிப்பு நடந்ததும் நேபாளம் வழியாக பாகிஸ்தான் தப்பி சென்றுள்ளான். பின்னர் அங்கிருந்து துபாய் சென்ற அவன் இத்தனை ஆண்டுகளாக அங்கேயே தங்கி இருந்தான். 17 ஆண்டுகள் ஆகி விட்டதால் இனி போலீசார் தன்னை கண்டுபிடித்து கைது செய்வது கடினம் என கருதிய அவன் மும்பை வந்தான். ஆனால் போலீசார் பிடித்து விட்டனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்