| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| வீரப்பன் பணத்தை பார்த்த மாணவர்களிடம் 2வது நாளாக விசாரணை |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:32.58 PM GMT +05:30 ] |
சந்தனக்கடத்தல் வீரப்பனின் பண மூட்டையை பார்த்ததாக கூறிய பள்ளிமாணவர்களிடம் இரண்டாம் நாளாக காவல்துறை விசாரணை நடைபெற்றது. |
சந்தன கடத்தல் வீரப்பன் கும்பல் நடமாடிக் கொண்டிருந்த வன கிராமங்களில் ஊஞ்சகொரை கிராமும் ஒன்று. இக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சங்கர், ஜெயசூர்யா, சக்திவேல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, காட்டின் வேலிக்கரையில் ஒரு கல்லை உருட்டி பார்த்தபோது, கட்டுக் கட்டாக பணம் இருந்ததாக ஊருக்குள் வந்து தெரிவித்தனர். இதையடுத்து, ஊர் மக்கள் சென்று பார்த்தபோது, அங்கு பண மூட்டை எதுவும் இல்லை.
ஒரு மாணவனின் பெற்றோர் இந்த பணத்தை எடுத்து வந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிலர் கூறிய புகாரின்பேரில், கொளத்தூர் போலீசார் ஊஞ்சகொரை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் முழுமையான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. பணத்தை முதலில் பார்த்தது யார்? எத்தனை கட்டு பணம் இருந்தது என்பது குறித்து 2வது நாளாக இன்று பணத்தை நேரில் பார்த்த 3 பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|