| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்; சாமி சிலைகள் உடைப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:57.28 AM GMT +05:30 ] |
வங்காள தேசத்தில் நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அஷ்ரப்டி கிராமத்தில் ஸ்ரீரக்ஷகாளி கோவில் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது. இங்கு திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 35 பேர் கொண்ட கும்பல் அந்த கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் மீது தாக்குதல் நடத்தினார்கள். |
| கலைப் பொருட்கள் மற்றும் கலை சின்னங்களை அடித்து நொறுக்கினர். கோவிலில் இருந்த 6 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது கோவில் அருகே இருந்த 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அச்சம்பவத்தால் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சோனார்கான் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி முதல் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா நடத்துவது தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறே மோதலுக்கு காரணம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|