தமிழ்நாட்டுச் செய்தி
மீன் விலை உயர்வு
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 06:41.51 AM GMT +05:30 ]
கடலில் மீன் வரத்து குறைவால் காசிமேட்டில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோவுக்கு ரூ.400 என்று உயர்ந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்வது வழக்கம். தினமும் நூற்றுக்கணக்கான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் செல்லும் மீனவர்கள், டன் கணக்கில் மீன்களை பிடித்து வந்து, காசிமேட்டில் ஏலம் விடுகின்றனர். இவற்றை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வார்கள். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

சில நாட்களாக காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிக அளவில் மீன் கிடைக்கவில்லை. குறைந்த அளவு மீன்களுடனே கரை திரும்புகின்றனர். இதனால் மீன்களின் விலை 2 மடங்காகி உள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறுகையில், “சில நாட்களாக நடுக்கடலில் தெளிவான நீரோட்டம் உள்ளது. இதனால் வலையில் மீன்கள் சிக்காமல் தப்பி விடுகின்றன. படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பி வர ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. இப்போது, டீசல் விலை உயர்வால், செலவு அதிகரித்துள்ளது. வழக்கமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு 60 முதல் 80 டன் வரை மீன்கள் வரும். இப்போது 30 முதல் 40 டன்னாக குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்துள்ளது” என்றார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், விலை அதிகமாக இருந்த போதிலும், மக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்