தமிழ்நாட்டுச் செய்தி
திருமணம் செய்ய மறுத்த பட்டதாரி பெண் வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:00.29 PM GMT +05:30 ]
ஒருதலைக்காதலால் திருமணம் செய்ய மறுத்த பட்டதாரிப்பெண்ணை வெட்டிக்கொன்ற டாஸ்மாக் ஊழியரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்,
பெரம்பூர் திருவள்ளுவர் தெரு ரமணா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். மனைவி தேவி. இவர்களது மகள் அனுரேகா (21). எம்பிஏ பட்டதாரி. அங்குள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் மனைவி, மகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

சூளை பாப்பய்யன் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (25) என்பவரை அனுரேகா காதலித்தார். இதுதெரியாமல் பெரம்பூர் பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான தியாகு (27) என்பவரும் அனுரேகாவை ஒருதலையாக காதலித்தார்.

நேற்று இரவு 10 மணிக்கு அனுரேகா வீட்டுக்கு தியாகு சென்றார். அப்போது காதலன் தியாகராஜனுடன் அனுரேகா இருந்தார். இதைப் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த தியாகு, அனுரேகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த தியாகராஜனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே அனுரேகா ரத்தவெள்ளத்தில் இறந்தார். தியாகு தப்பியோடிவிட்டார்.

தகவல் அறிந்த செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரன், சப்இன்ஸ்பெக்டர் ரத்தினவேல்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தியாகராஜனை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தியாகுவைத் தேடினர். புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தவை:

தேவி சீட்டு நடத்தி வந்தார். மேலும் வீடு வாங்குவது, விற்பது தொடர்பாக இடைத்தரகு வேலையையும் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு பழக்கமானார் தியாகு. பல ஆண்டுகளாக தேவி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். குடும்ப நண்பர் என்பதால் அனுரேகாவும் இயல்பாகப் பழகினார்.

ஆனால் தியாகுவுக்கு அனுரேகா மீது காதல் இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை தனக்குத் திருமணம் செய்து தரும்படி தேவியிடம் கேட்டார். அவரோ, ‘என் மகள் படித்தவள். நீ குடிக்கிறாய். உனக்கும் அவளுக்கும் பொருந்தாது’ என்று கூறி மறுத்தார்.
அனுரேகாவிடம் தியாகு நேரடியாகப் பேசினார். ‘என் அம்மாவே சம்மதித்தாலும் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என்று அனுரேகா கடுமையாக மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தியாகு அவரையும், காதலனையும் வெட்டினார் என்பது தெரியவந்தது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்