| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| உபி.யில் கோயில் நெரிசலில் சிக்கி 65 பேர் பலி |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 05:16.24 PM GMT +05:30 ] |
உத்திரபிரதேச மாநிலத்தில் ராம் ஜானகி கோயிலில் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. |
லக்னோ தென்கிழக்கு பகுதியில் உள்ளது பிரதாப்கார் மாவட்டம். இங்குள்ள குண்டா என்னும் நகரில் ராம்ஜானகி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. விழாவில் பிறருக்கு இலவச உடை, உணவு வழங்குதல் வழக்கம். மதிய உணவு வழங்கப்பட தயார் ஆனது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் கோயில் நுழைவு வாசலில் முற்றுகையிட்டனர். கோயிலுக்குள் நுழைவதில் தள்ளு, முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாயிற்கதவு உடைந்து விழவும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அங்கும் , இங்குமாக சிதறி ஓடினர். இதில் ஒருவர் மீது ஒருவர் விழ பலர் மயக்கமுற்றனர். பலர் மிதி பட்டு இறந்தனர்.
உயிர்ப்பலி அதிகரிக்கும் என அச்சம் : முதலில் 15 பேர் இறந்து விட்டதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் 50 பேர் இறந்து விட்டதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றன. தற்போது பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், காம்பவுண்ட் சுவரை அனைத்து பக்தர்களும் ஒரே நேரத்தில் குவிந்தததால் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர் . சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கோயில் திருவிழாவில் பக்தர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|